10th of June 2014
சென்னை::ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், பரத்தை வைத்து அழகாய் இருக்கிறாய் பழமாய்
இருக்கிறது என்ற படத்தின் மூலம் இயக்குநரானார். அப்படம் தோல்வியை
தழுவியதால், படம் இயக்கும் வாய்ப்பை இழந்த விஜய் மில்டன், ஒளிப்பதிவில்
கவனம் செலுத்தினார்.
இதற்கிடையில் பல வருடங்கள் கழித்து மீண்டும் படம் இயக்க முடிவு செய்த விஜய் மில்டன், தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் 'கோலிசோடா' படத்தை இயக்குவதோடு, தயாரிக்கவும் செய்தார்.
இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் குறைந்த முதலீட்டில் உருவாகி, பெரும் வசூலை ஈட்டியதால், விஜல் மில்டனுக்கு வாய்ப்புகளும் பல வந்தன. இதற்கிடையில், விஜய் மில்டன் விக்ரமை ஹீரோவாக வைத்து தனது அடுத்த படத்தை தொடங்கிவிட்டார்.
தற்போது படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் இப்போதே விலை பேச தொடங்கிவிட்டார்களாம். படத்தின் எந்தவித விளம்பரமோம், இதுவரை எடுக்கப்பட்ட காட்சியோ எதையும் பார்க்காமலே இப்படத்தை வாங்குவதற்காக சுமார் 25 கோடிக்கும் மேல் விலை கொடுக்க விநியோகஸ்தர்கள் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

Comments
Post a Comment