4th of June 2014
சென்னை:இந்தி படங்களில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன், தனது தாயாருடன் தங்காமல்
தான் மட்டும் தனித்து மும்பையிலுள்ள பாந்தரா பகுதியில் குடியிருந்து
வந்தார். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தபோதுதான் ஒரு மர்ம நபர்
அந்த வீட்டுக்குள் புகுந்து ஸ்ருதியை தாக்கினான். அதையடுத்து போலீசில்
புகார் கொடுத்தார் ஸ்ருதி. பின்னர் அந்த மர்ம நபர் கைது செய்யப்பட்டான்.
இதனால்,
உடனடியாக அந்த வீட்டை காலி செய்த ஸ்ருதிஹாசன், சில நாட்களாக தனது
தோழியின் வீட்டில் குடியிருந்தவர், அதையடுத்து வேறொரு வாடகை வீடு
பிடித்து குடியேறினார். அந்த வீட்டில் இருந்து கொண்டே பாதுகாப்பான
பகுதியில் சொந்தமாக வீடு வாங்குவதற்காக தேடி வந்தவர் தற்போது மும்பை
அந்தேரி பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கி குடியேறி
விட்டார். அது மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள விஐபி ஏரியாவாம்.
இந்தி
சினிமாவில் நடிக்கும் பல நடிகர்-நடிகைகளும் அந்த பகுதியில்
குடியிருக்கிறார்களாம். ஆக, பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு தான்
சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்தே சொந்தமாக வீடு வாங்கி
குடியேறியிருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
Comments
Post a Comment