கோடம்பாக்கத்திற்கு கிடைத்துள்ள புதிய சினேகா !!!

20th of June 2014
சென்னை:காதல் பஞ்சாயத்து, காதல் 2014 ஆகியப் படங்களில் நாயகியாக நடித்திருப்பவர் நேகா. இவர் பார்ப்பதற்கு சினேகா போல இருப்பதாக கோடம்பாக்கத்தினர் கூறிவருகின்றனர்.

சமீபத்தில் 'காதல் 2014' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நேகா கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள், திருமணத்திற்குப் பிறகு சினேக, சினிமாவில் இருந்து சென்றுவிட்டார் என்று வருதப்பட்ட ரசிகர்களுக்காக தற்போது மற்றொரு சினேகாவாக வந்திருக்கிறார்

 
நேகா. அவருக்கும் இவருக்கும் பெயரில் ஒரே ஒரு எழுத்து மட்டும் தான் வித்தியாசம். ஆனால் சிரிப்பு அழகு அனைத்திலும் அவரைப் போலவே இருக்கும் இவர், அவரைப் போலவே முன்னணி நடிகையாகவும் வலம் வருவார், என்று தெரிவித்தார்கள்.

Comments