சென்னை:ஜெனிலியா சீக்கிரமே அம்மாவாகப் போகிறார். அந்த நாளை எண்ணி மகிழ்ச்சியில் காத்திருக்கிறேன் என்றார் காதல் கணவர் ரிதேஷ்.பாய்ஸ், சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின் உள்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ஜெனிலியா. இவரும் பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஜெனிலியா சீக்கிரமே அம்மா ஆகப்போகிறார் என்றார் ரிதேஷ். இதுபற்றி அவர் கூறியதாவது:
10 வருடமாக நாங்கள் காதலர்களாக இருந்து பின்னர் திருமணம் செய்துகொண்டோம். ஜெனிலியாவும் நானும் இருவர் அல்ல ஒருவர். தோழியிடம் காதல் கொள்வது என்பது சிறப்பான விஷயம். அவருடைய சுட்டித்தனமும், சிரிப்பும் என்னை கவர்ந்தது. காதல் ஜோடிகளாக நாங்கள் வலம் வந்தபோதுகூட இருவரும் எளிமையாக இருப்பதைத்தான் விரும்புவோம். காதல் பரிசு ஏதாவது வாங்கித் தந்தாலும் அது ஆடம்பரமாக இருக்கக்கூடாது என்பதுடன் குறிப்பிட்ட விலைக்கு மேல் இருக்கக்கூடாது என்றும் கண்டிஷன் போட்டுவிடுவார். ஜெனிலியாவுக்கு குடும்பத்தையும் தனது வேலையையும் எப்படி குழப்பமில்லாமல் பார்த்துக்கொள்வது என்பது தெரியும். அந்த விஷயத்தில் நான் குழப்பவாதிதான். ஜெனிலியா இப்போது கர்ப்பமாக இருக்கிறார். இருவருமே குட்டி பாப்பாவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.
Comments
Post a Comment