மஞ்சப்பை.. ஹெச் டி தரத்துடன் திருட்டு வீடியோ.. இணையத்தில் வெளியானது!!!

11th of June 2014
சென்னை:அதுவும் நல்ல ஹெச் டி தரத்தில் படம் முழுவதையும் வெளியிட்டுள்ளனர்.லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் மற்றும் இயக்குநர் சற்குணம் இணைந்து தயாரித்த படம் மஞ்சப்பை. கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், திருப்தியான வசூலுடன் ஓடிக் கொண்டுள்ளது.

குறிப்பாக பி, சி சென்டர்களில் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.ஆனால் தயாரிப்பாளர்களுக்கு அந்த மகிழ்ச்சியை நீடிக்க விடாத வகையில், படத்தின் வீடியோ நல்ல துல்லியமான தரத்தில் வெளியாகியுள்ளது. இணையத்திலும், டிவிடிகளிலும் இப்போது படம் கிடைக்கிறது.இது படத்தின் வசூலை கடுமையாக பாதிக்கும் என்பதால் கடும் கோபத்தில் உள்ளனர் தயாரிப்பாளர்கள்.

Comments