அஜித்துக்காக வழிவிட்டு ஒதுங்கிய சிம்பு!!!


5th of June 2014சென்னை:அஜித்தை வைத்து படு விறுவிறுப்பாக படம் இயக்கி வருகிறார் கௌதம் மேனன். சிம்பு பாண்டிராஜின் டைரக்ஷனில் நயன்தாரவுடன் ‘இது நம்ம ஆளு’ படத்தில் பிஸியாகிவிட்டார். அப்படியென்றால் கௌதம் மேனன் – சிம்பு காம்பினேஷனில் ‘சட்டென்று மாறுது வானிலை’ என ஒரு படம் தயாரானதே.. அது என்ன ஆனது என்கிற கேள்வி உங்களில் பலருக்கு எழுந்திருக்கும்.
 
கவலைப்பட வேண்டாம்.. அந்தப்படம் கிடப்பில் எல்லாம் போடப்படவும் இல்லை.. கைவிடப்படவும் இல்லை.. அந்தப்படத்தின் ஷூட்டிங் வேலைகள் ஏறக்குறைய முடிந்துவிட்டது. அந்த நேரத்தில்தான் கௌதம் அஜித் படத்தை துவங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
 
உங்களுக்குத்தான் தெரியுமே சிம்பு அஜித்தின் தீவிர ரசிகர் என்று. தன் ‘தல’ படத்திற்கு தானே தடையாக இருப்பாரா என்ன..? கௌதமிடம் அஜித் படத்தை முடித்துவிட்டு வாருங்கள் நம் படத்தை தொடரலாம் என பெருந்தன்மையுடன் கூறிவிட்டார். அதற்கேற்ற மாதிரி பாண்டிராஜின் படம், ஹன்சிகாவுடன் நடிக்கும் வாலு’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு தயாராக இருக்கவே அதற்குள் புகுந்துகொண்டார் சிம்பு.

Comments