சதுரங்க வேட்டை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!!!

30th of June 2014
சென்னை:நடிகரும், இயக்குனருமான மனோபாலா தயாரித்துள்ள படம் ‘சதுரங்க வேட்டை’. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் கதையின் நாயகனாக நட்ராஜ் நடித்துள்ளார்.
 
சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இப்படத்தினை தமிழகம் முழுக்க வெளியிடும் உரிமையை லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் கைபற்றியது. எல்லா வேலைகளும் முடிந்து, ரிலீசுக்கு தயாராகியுள்ள ‘சதுரங்க வேட்டை’ படத்தை ஜூலை 25-ஆம் தேதி தமிழகம் முழுக்க ரிலீஸ் செய்கின்றனர்
 
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தினர். ‘மஞ்சப்பை’ படத்தைத் தொடர்ந்து ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் ரிலீஸ் செய்யும் படம் இது என்பதால் இப்படம் மீதும் ரசிகர்களிடையே ஒருவித எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

Comments