சூப்பர்ஸ்டாரின் இன்னுமொரு ‘முதல்’ சாதனை!!!

7th of June 2014
சென்னை:இந்திய சினிமாவை பொறுத்தவரை கறுப்பு வெள்ளையில் தொடங்கி, 3டி, அனிமேஷன், மோஷன் கேப்ட்சரிங் என சினிமாவின் நான்கு வித புதிய தொழிநுட்ப படங்களிலும் நடித்த ஒரே ஹீரோ ரஜினி மட்டுமே. இப்போது கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘லிங்கா’வில் இன்னொரு புதிய ‘முதல்’ சாதனை ஒன்று முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
எந்திரனில் ரஜினியுடன் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு தான் ‘லிங்கா’விலும் ஒளிப்பதிவாளர். இந்தப்படத்திற்காக இந்தியாவிலேயே முதன்முதலாக Phantom Flex 4K என்கிற ஹைஸ்பீடு கேமராவை பயன்படுத்தியுள்ளார் ரத்தினவேலு.
 
இந்த கேமராவை பயன்படுத்தி இந்தியாவில் தயாராகும் படத்தில் நடிக்கும் முதல் ஹீரோ என்ற பெருமையும் ரஜினிக்கே கிடைத்துள்ளது. சமீபத்தில் ஹாலிவுட் சண்டை பயிற்சியாளரான லீ விட்டேகர் அமைத்த சண்டைக்காட்சி ஒன்றில் ரஜினி நடிக்க அது ஸ்டீரியோவிஷன் முறையில் இந்த கேமராவினால் படமாக்கப்பட்டது.

Comments