24th of June 2014
சென்னை:தெலுங்குத் திரையுலகமான டோலிவுட்டின் 'தங்க மகள்' ஆக ஸ்ருதிஹாசன்
முதலிடத்தில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமன்னா 2வது இடத்திலும்
ஸ்ரேயா மூன்றவாது இடத்திலும் தேர்வாகியிருக்கிறார்கள். ஆந்திராவிலிருந்து
வெளிவரும் பத்திரிகை ஒன்று ஆன்லைன் வாக்குப் பதிவு மூலம் இதைத் தேர்வு
செய்திருக்கிறது.
சமீபகாலமாக தனது கிளாமரான
நடிப்பில் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்திழுத்த ஸ்ருதிஹாசன் முதலிடத்தில்
தேர்வானதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்த வருடத்தில் இவர் நடித்து வெளிவந்த
'எவடு, ரேஸ் குர்ரம்' ஆகிய படங்களில் ஸ்ருதியின் தோற்றமும், கவர்ச்சியும்
பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்தது.
படத்துக்குப் படம் கிளாமரில் அடுத்த
கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார். தற்போது தமிழில் ஒரு
படத்திலும் ஹிந்தியில் நான்கு படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
டோலிவுட்டின் அதிக விரும்பத்தக்க நாயகியாக தேர்வானது பற்றி ஸ்ருதிஹாசன்
மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
வெறும் லிப்ஸ்-டிக்கும், மேக்கப்பும் மட்டுமே நம்மை அழகாகக் காட்டி விடாது. நாம் யார் என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டும். இதுதான் எனது தோற்றம், இதுதான் எனது அழகு என நான் உணர்ந்துள்ளேன், அதை வைத்து நான் மகிழ்ச்சிகரமாக இருக்கிறேன். இந்த உண்மையை நாம் ஏற்றுக் கொண்டாலே அதுவே நம்பிக்கையாக மாறி நம்மை அழகாக வைத்துக் கொள்ளும்.
நம்மை நாமே செக்ஸியாக உணர வேண்டும், செக்ஸியாக நினைத்துக் கொள்ள வேண்டும். ஆடைகள் நம்மை அணியக் கூடாது, ஆடைகளை நாம்தான் அணிந்து கொள்ள வேண்டும். அதுதான் நமக்கு அழகாகவும் இருக்கும், என்ன நடந்தாலும் நீங்கள் நீங்களாக இருங்கள்,” என தன் அழகின் ரகசியத்தை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்துகிறார் ஸ்ருதிஹாசன்
Comments
Post a Comment