27th of June 2014
சென்னை:சென்றவாரம் பிரபல வார இதழ் ஒன்று அடுத்த சூப்பர்ஸ்டார் கருத்துகணிப்பு வெளியிட்டார்கள். இதில் விஜய் வெற்றிபெற்றதாக செய்தி வெளியிட்டது.இந்த கருத்துகணிப்பு வந்த நாள் முதல் பல தரப்பிலிருந்தும் முனகல்கள்தான்.இதனை சில தரப்பினர் ஆதரித்தாலும்,அதிகமானோர்கள் எதிர்ப்புகளையே தெரிவித்துள்ளனர்.
அதிலும் ரஜினி ரசிகர்கள் கேட்கவா வேண்டும். தலைவர் இந்த கோதாவில் தொடர்ந்து இருக்கும்போது இந்த கணிப்புகள் தேவைதானா என்று எண்ணினர். இந்த கருத்துகணிப்பு இப்போது எதற்காக நடந்தினார்கள் என்று அனைத்து ரசிகர்களுக்கும் கேள்வி எழவே செய்தது.
இந்த கருத்துகணிப்பு குறித்து தற்போது புதிய செய்திகள் வெளிவந்து அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த இதழ் கருத்துகணிப்பு நடத்திய இடமெல்லாம் ரசிகர்கள் வாக்களித்தது அஜீத்துக்குதானாம். விஜய் பெயரை முன்மொழிந்தவர்கள் மிகவும் குறைவாகவே காணப்பட்டனராம். சொல்லபோனால் அஜீத்துக்கும் விஜய்க்கும் ஒரு லட்சத்துக்கும் மேல் வாக்குகள் வித்தியாசம் இருந்தததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அஜீத் தரப்பிடம் அது தெரிவிக்கப்படவில்லையாம். இன்னொரு செய்தி என்னவென்றால் அஜீத்தை எளிதில் தொடர்பு கொள்ளவும் முடியாது.அப்படியே அஜீத்திடம் தெரிவித்திருந்தாலும் அதை அவர் பெரிதாக எடுத்துகொள்கிற ஆள் கிடையாது என்பது அனைவரும் தெரிந்ததே.
ஆனால் எதற்காக விஜய் பெயரை வெற்றி பெற்றதாக அறிவித்தார்கள் என்பது ரசிகர்களுக்கு எழக்கூடிய கேள்விதான். இந்த செய்தியை அந்த கருத்துகணிப்பு நடத்திய நபர்களில் ஒருவரே வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த வார இதழ் இப்படி செய்திருக்காது என்று நாம் நம்புவோமாக!!

Comments
Post a Comment