தமிழில் எந்த பட வாய்ப்புமே கிடைக்கவில்லை: தெலுங்குப் படங்களில் வாய்ப்புத் தேடினார்: இவன் வேற மாதிரி' படத்தில் நாயகி சுரபி!!!
16th of June 2014
இவன் வேற மாதிரி' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் டில்லியைச் சேர்ந்த
சுரபி. இவர் அறிமுகமான படம் தோல்விப் படமாக அமைந்துவிட்டதால், அடுத்து
தமிழில் எந்த பட வாய்ப்புமே கிடைக்கவில்லை. இதனால் வேறு வழியில்லாமல்
தெலுங்குப் படங்களில் வாய்ப்புத் தேடினார். உடனே அதற்கு பலன் கிடைத்தது.
கண்மணி என்ற தமிழ் இயக்குனர் தெலுங்கில் இயக்கும் புதிய படத்தில் நாயகியாக
ஒப்பந்தமாகி இருக்கிறார் சுரபி.
பத்து நாட்களுக்கு முன்னதாகவே இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டது. படத்தின் நாயகனாக சுந்தீப் கிஷன் நடிக்கிறார்.“இப்படத்திற்காக நாங்கள் கிளாமரான நடிகையைத் தேடவில்லை. மறைந்த நடிகை சௌந்தர்யா போன்று அழகான குடும்பப் பாங்கான நடிகையைத் தேடினோம். அப்போதுதான் சுரபியைப் பார்த்தேன். அழகான கண்களுடன் மிகவும் பாந்தமான தோற்றத்தில் இருந்தார்.

இவர்தான் படத்தின் நாயகி என அப்போதே முடிவு செய்துவிட்டேன். இப்படத்தின் கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருப்பார் சுரபி,” என சுரபியின் அழகை விமர்சிக்கிறார் இயக்குனர் கண்மணி.
இவர் தமிழில் 'ஆஹா எத்தனை அழகு' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். தெலுங்கில் 'நா ஓபிரி' படத்தின் மூலம் அறிமுகமானார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த புதிய படத்தை இயக்குகிறார்
இவர் தமிழில் 'ஆஹா எத்தனை அழகு' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். தெலுங்கில் 'நா ஓபிரி' படத்தின் மூலம் அறிமுகமானார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த புதிய படத்தை இயக்குகிறார்
Comments
Post a Comment