6th of June 2014
சென்னை:பாலிவுட் நடிகைகயான சோனாக்ஷி சின்ஹா முதன் முதலாக தென்னிந்திய மொழிக்குள் அடியெடுத்து வைக்கும்போது அது இந்திய சூப்பர்ஸ்டாரின் படம் என்பது அது தமிழில் உருவாகும் படம் என்பதும் சோனாக்ஷிக்கு கிடைத்த வரப்பிரசாதம் தான். பாலிவுட் நடிகரும் ரஜினியின் நீண்டகால நண்பருமான சத்ருகன் சின்ஹாவின் மகள்தான் சோனாக்ஷி சின்ஹா.
சோனாக்ஷி சின்ஹா முதல்நாள் ‘லிங்கா’ படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்ததும் அவரிடம் “உங்களுடன் நடிப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது.. அதேசமயம் பதட்டமாகவும் இருக்கிறது” என்று கூறியுள்ளார். அதற்கு ரஜினி, “என்ன செய்வது.. எனக்கும் தான் பதட்டமாக இருக்கிறது.. நீ என் நண்பரின் மகள் என்பதால்” என்று பதிலுக்கு கலாட்டா செய்து அவரை சகஜ நிலைக்கு கொண்டுவந்தாராம்...
Comments
Post a Comment