சென்னை: கமல்ஹாசன் நடித்து வரும் உத்தம வில்லன் படத்தை ரமேஷ் அரவிந்த்
இயக்குகிறார். இதில் ஆண்ட்ரியா, பூஜா குமார், பூ, மரியான் புகழ் பார்வதி
மேனன் நடிக்கிறார். இவர்களோடு இன்னொரு மலையாள நடிகையான பார்வதி நாயரும்
நடிக்கிறார். இருவருக்கும் ஒரே பெயர் என்பதால் இவரது காட்சியை அவருக்கும்,
அவரது காட்சியை இவருக்கும், மாற்றி சொல்லிவிடுகிறார்களாம் உதவியாளர்கள்.
இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டதாம். அதனால் இயக்குனர் ரமேஷ் அரவிந்த்,
பார்வதி என்பதை விட்டுவிட்டு நாயர், மேனன் என்றே இருவரையும் குறிப்பிடச்
சொன்னாராம்.
நானும் பார்வதி மேனனும் நல்ல பிரண்ட். ஆனாலும் இந்த பெயர் குழப்பம் ரொம்ப நாளாகவே இருக்கிறது. இவரும் ஒரே மாதிரி உடை அணிந்து பேஸ்புக்கில் போட்டோம், இருவரும் அக்கா தங்கையா என்று எல்லோரும் கேட்டார்கள் அது எங்களுக்கு சந்தோஷமாக இருந்தது. இருந்தாலும் எனது பெயரில் சிறிது மாற்றம் செய்யலாமா" என்று யோசித்து வருகிறேன் என்கிறார் பார்வதி நாயர்.
Comments
Post a Comment