28th of June 2014
சென்னை:கண்ணா லட்டு தின்ன ஆசையா வெற்றி பெற்றதை அடுத்து அந்த கூட்டணி (பவர்ஸ்டாரை தவிர்த்து) நடித்த வாலிபராஜா படத்தின் இசைவெளியீட்டு சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது. அவ்விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டு இசையை வெளியிட்டார்.
உத்தமவில்லன் பட வேலைகளில் பிஸியாக இருந்தாலும் சந்தானம் கேட்டாரே என்ற ஒரு காரணத்திற்காக அந்த விழாவில் கமல் கலந்துகொண்டாராம். ஆனால் அழைப்பு விடுத்த சந்தானம்தான் விழாவில் மிஸ்ஸிங். வாலிபராஜா விழாவுக்கு வந்த கமல் உண்மையில் மனவருத்தம் அடைந்தாராம்.
ஆந்திராவில் நடைபெற்று வரும் லிங்கா படத்தின் படப்பிடிப்பில் ரஜினி உடன் நடித்துக் கொண்டிருப்பதால் சந்தானம் வரவில்லை என்று காரணம் கூறப்பட்டதாம். அதைக் கேட்டதும் கமலுக்கு சந்தானம் மீது வருத்தமாம். ரஜினி உடன் நடிப்பது நல்ல விஷயம்தான். அதை முன் கூட்டியே எனக்கு தகவல் சொல்லி இருக்கலாமே என்று வாலிபராஜா படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஹெச்.முரளியிடம் கூறினாராம் கமல்.
இதனை அறிந்து பதறிய சந்தானம் கமலுக்கு போன் செய்து மன்னிப்பு கேட்டாராம் சந்தானம்.
அட போங்க சார் அவரை தயாரிப்பாளர் அந்தஸ்துக்கு உயர்த்தி நல்ல வருமானமும் பெற்று தந்த ராம. நாராயணன் மறைவுக்கே அஞ்சலி செலுத்த வரல.அவ்வளவு பிஸி. இத போய் பெருசா எடுத்துட்டீங்களே கமல் சார்.
Comments
Post a Comment