கௌதம்மேனன் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்புக்காக மலேஷியா புறப்பட்டார் அஜீத்!!!

10th of June 2014
சென்னை:கௌதம்மேனன் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்புக்காக அஜீத் மலேஷியா புறப்பட்டுச் சென்றார். அவருடைய 55 வது படமாக உருவாகி வரும் இப்படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. காரணம்...முன்கூட்டியே தலைப்பு வைத்தால் இது என்னுடைய தலைப்பு என்று யாராவது சொந்தம் கொண்டாடுவார்கள். பிறகு கோர்ட்டுக்குப் போவார்கள். இதனால் அனாவசிய பிரச்னை என்பதால் கடைசி நேரத்தில் தலைப்பு வைத்தால் போதும் என்று சொல்லிவிட்டாராம் அஜீத். அதேசமயம் இப்படத்தில் அஜீத் நடிக்கும் கேரக்டரான சத்யாவையே இப்படத்தின் தலைப்பாக வைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், சென்னையில் 75 சதவிகித படப்பிடிப்பு நிறைவுற்றநிலையில் க்ளமாக்ஸ் காட்சியை படமாக்க திட்டமிட்டார் இயக்குநர் கௌதம் மேனன். க்ளைமாக்ஸ் காட்சியை சென்னையில் எடுத்தால் அது பற்றிய தகவல் வெளியே கசிந்து மீடியாக்களில் செய்தியாகிவிடும். அது படத்துக்கு நல்லதல்ல என்று நினைத்தாராம் அஜீத். இது பற்றி இயக்குநருடன் கலந்து பேசிய பிறகு மலேஷியாவில் க்ளைமாக்ஸ் காட்சியை எடுக்கலாம் என முடிவு செய்துள்ளனர். அதன்படி கௌதம்மேனன் தலைமையிலான படக்குழு மலேஷியா புறப்பட்டுச் சென்றுள்ளது.

Comments