14th of June 2014
சென்னை:இன்றைய தேதியில் அதிக படம் தயாரிக்கும் நிறுவனம் லிங்குசாமியின்
திருப்பதி பிரதர்ஸ்தான். சூர்யா நடிக்கும் அஞ்சான், கமல் நடிக்கும் உத்தம
வில்லன், விஜய் சேதுபதி நடிக்கும் இடம் பொருள் ஏவல், பலாஜி சக்திவேல்
இயக்கும் ரா ரா ராஜசேகர், பன்னீர் செல்வம் இயக்கும் நான்தான் சிவா,
சிவகார்த்திகேயன் நடிக்கும் ரஜினி முருகன் ஆகியவை தற்போது தயாரிப்பில்
இருக்கும் படங்கள். சமீபத்திய ஹிட்டான கோலிசோடா, மஞ்சப்பை இரண்டையும்
திருப்பதி பிரதர்ஸ் வெளியிட்டு லாபத்தை அள்ளி இருப்பதில் திருப்பதி
பிரதர்ஸ் மகிழ்ச்சியில இருக்கிறார்கள்.
இதுபற்றி
லிங்குசாமி கூறியிருப்பதாவது: எங்கள் தயாரிப்பில் அடுத்து ரிலீசாகப்போவது
அஞ்சான், உத்தம வில்லன் 80 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது.
மற்ற படப்பிடிப்புககள் நடந்து வருகிறது. ரஜினி முருகன் அடுத்த மாதம்
படப்பிடிப்பு தொடங்குகிறது.
இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல், ராஜு முருகன், ரவி, சுரேஷ் ஆகியோர் படத்தின் தேர்வு குழுவில் இருக்கிறார்கள். அவர்கள் பார்த்து ஓகே சொன்னால் படத்தை வாங்கி வெளியிடுகிறோம். வாங்கிய பிறகு அதை எப்படி மேன்மைபடுத்தலாம் என்று யோசித்து அதனையும் செய்வோம். மஞ்சப்பை படத்தின் பாடல்கள் அனைத்தையும் மீண்டும் எடுத்தோம்.
அதே மாதிரி புதிய இயக்குனர்கள் கதை சொன்னால் அது எனக்கு பிடித்திருந்தால் சில திருத்தங்களை சொல்வேன். அந்த திருத்தங்களோடு வந்து மீண்டும் கதை சொன்னால் தயாரித்துவிடுவேன். படத்தின் வெளியீட்டின் போது விளம்பரத்திற்காக கணிசமாக செலவு செய்வோம். கோலிசோடாவுக்கு செய்த விளம்பரம் அதன் தயாரிப்பு செலவை விட அதிகம். இப்படி உழைப்பதால்தான் வெற்றி கிடைக்கிறது என்கிறார் லிங்குசாமி.
Comments
Post a Comment