ரஜினி பிறந்த நாளில் லிங்கா!!!

25th of June 2014
சென்னை:கோச்சடையான்’ படத்தைத் தொடர்ந்து ‘லிங்கா’வில் படு பிசியாக, படு உற்சாகமாக நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ‘எந்திரன்’, மற்றும் ‘கோச்சடையான்’ படங்களுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் படம் என்பதாலும்,
 
முத்து’, ‘படையப்பா’ ஆகிய வெற்றிப் படங்களுக்கு பிறகு தனது இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் என்பதாலும் ’லிங்கா’வின் ஸ்கிரிப்ட்டை படு விறுவிறுப்பாக உருவாக்கியிருக்கிறாராம் கே.எஸ்.ரவிக்குமார்.
 
ரஜினிக்கு இரண்டு வேடம், சோனாக்‌ஷி சின்ஹா - அனுஷ்கா என இரண்டு ஹீரோயின்கள், வில்லன்களாக ஜெகபதி பாபு, தேவ்கில் மற்றும் சில ஹாலிவுட் நடிகர் - நடிகைகள் என ‘லிங்கா’வில் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். 
 
 தென்னிந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்ட படமாக உருவாகி வரும் ‘லிங்கா’வை ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இப்போது ‘லிங்கா’வின் வேலைகள் ஜெட் வேகம் பிடித்திருப்பதாக கூறப்படுகிறது.

Comments