16th of June 2014
பல நடிகைகளின் வாழ்வில் பாலியல் தொந்தரவு இருந்து தான் வருகிறது. அதேபோல் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்து பின் ஐபிஎல்லில் பஞ்சாப் அணியின் உரிமையாளராக இருந்து வரும் ப்ரீத்தி ஜிந்தாவுக்கு அவரது முன்னாள் காதலரும், தற்போது தொழிலில் மட்டும் பார்ட்னருமாக உள்ள நெஸ் வாடியாவிடம் இருந்து பாலியல் தொந்தரவு வந்துள்ளதாம்.
சென்னை-பஞ்சாப் அணிக்கு இடையே மும்பையில் அரையிறுதி போட்டி நடந்த போது நெஸ் வாடியா தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ப்ரீத்தி புகார் கொடுத்துள்ளார்.
இதை நெஸ் வாடியா முற்றிலுமாக மறுத்துள்ளார், மேலும் இந்த வழக்கு தொடர்பாக மைதானத்தில் உள்ள சி.சி.டிவி கேமராக்கள் மூலம் போலிஸார் பார்த்ததில் இவர் ப்ரீத்தி அமர்ந்திருந்த இருக்கையை விட 6 வரிசை பின்னால் உட்கார்ந்திருந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து போலிஸார் மேலும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Comments
Post a Comment