மோகன்லாலுக்கு வாய்ஸ் கொடுத்த மம்முட்டி மகன்!!!

4th of June 2014
சென்னை:மோகன்லால் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ‘கூதரா’. இந்தப்படத்தை ஸ்ரீநாத் ராஜேந்திரன் என்பவர் இயக்கியுள்ளார். கூதரா’ என்பது படத்தின் முக்கிய கேரக்டர்களாக வரும் கூபெர், தருண், ராம் ஆகியோரின் முதல் எழுத்துக்களின் சேர்க்கை தான். (நம்ம ஊர்ல ‘சரோஜா’ன்னு டைட்டில் வைத்தார்களே அது மாதிரி)
 
இந்தப்படத்தில் பரத் அந்த மூவரில் ஒருவராக முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் பாவனா, ஜனனி ஐயரும் உண்டு. சமீபத்தில் இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த ட்ரெய்லரில் பின்னணிக்குரல் கொடுத்திருந்தார். மம்முட்டியின் மகனும் இளம் முன்னணி ஹீரோவுமான துல்கர் சல்மான்.
 
மோகன்லால் படத்திற்கு இவர். வாய்ஸ் கொடுக்க பிரத்யேக காரணம் என்ன? வேறு ஒன்றுமில்லை.. இந்தப்படத்தின் இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன், தான் இயக்கிய ‘செகண்ட் ஷோ’ படத்தில்தான் துல்கரை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். அந்த நட்புக்காகத்தான் அவர் அழைத்ததுமே வந்து வாய்ஸ் கொடுத்துள்ளார் துல்கர்.

Comments