இளையராஜா இசையமைக்கும் இந்திப் படமான ஷமிதாப்பில் ஒரு பாடல் பாடுகிறார் பாலிவுட்டின் சாதனை நடிகர் அமிதாப் பச்சன்!!!
20th of June 2014
சென்னை:இளையராஜா இசையமைக்கும் இந்திப் படமான ஷமிதாப்பில் ஒரு பாடல் பாடுகிறார் பாலிவுட்டின் சாதனை நடிகர் அமிதாப் பச்சன்.
பால்கி இயக்கும் இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், தனுஷ், அக்ஷரா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இதற்கு முன் பா படத்தில் இளையராஜா இசையில் அமிதாப் பச்சன் ஒரு பாடல்
பாடியிருந்தார். அந்தப் பாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில்
ஷமிதாப் படத்திலும் அமிதாப் பச்சனை ஒரு பாடல் பாடுமாறு இளையராஜா கேட்டுக்
கொள்ள, மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார் அமிதாப்.
இதுகுறித்து
அமிதாப் பச்சன் கூறுகையில், "இசைமேதை இளையராஜாவின் அற்புதமான இசையில் அருமையான பாடல் பாடும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. இத்தனை ஆண்டுகள் கடந்தும் இன்றும் முன்னணியில் இருப்பவர் இளையராஜா. அவர் ஒரு மேதை," என்று குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment