ராய் லட்சுமியின் லண்டன் - பொள்ளாச்சி ஒப்பீடு!!!

15th of June 2014
சென்னை:லட்சுமி ராய், என்ற தனது பெயரை சமீபத்தில் ராய் லட்சுமி, என்று மாற்றியமைத்துக் கொண்ட ராய், சினிமா துறைக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டதாம். திரைப்பட துறையில் தனது ஒன்பது  வருட அனுபவத்தில் பல்வேறு வகையான  கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார்.
 
நவ நாகரிக கவர்ச்சி பாத்திரங்கள் முதல் மிகவும் கண்ணியமான கதாபாத்திரங்கள் வரை பல்வேறு வகையான பாத்திரங்கள் நடித்து வரும் ராய் லட்சுமி சேலை கட்டினால் கூட கவர்ச்சியாக இருப்பதாக தனது ரசிகர்கள் கூறுவது தனக்கு.
 
பெருமை என்றார். இந்த பாத்திரங்களின் இடையே உள்ள வித்தியாசத்தை லண்டனிலிருந்து 'ராஜா டி ராஜா' என்ற படத்துக்காக , நேரடியாக பொள்ளாச்சிக்கு வந்து உள்ளதை ஒப்பிட்டார். "குளுமையான லண்டனில் இருந்து வெப்பமான பொள்ளாச்சிக்கு வந்தது புதிய அனுபவமாக இருந்தது. அதை விட உன்னதமான அனுபவம், மம்மூட்டி சாரின் ஜோடியாக நடிப்பது. அவர் இருக்குமிடம் தொழில் நேர்த்தி நிறைந்து உள்ள இடம். அவரிடமிருந்து நிறைய கற்று கொள்கிறேன்."  என்று கண்களில் உற்சாகம் கொப்பளிக்க கூறினார்.
 

Comments