12th of June 2014சென்னை:சினேகா, பிரகாஷ்ராஜ் ஜோடியாக நடித்த ‘உன் சமையலறையில்’ படம் கடந்த வாரம் ரிலீசாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் நடித்தது குறித்து சினேகா அளித்த பேட்டி வருமாறு:–
உன் சமையலறையில்’ படத்தில் எனக்கு நல்ல கேரக்டர் அமைந்தது. படத்தை பார்த்து நண்பர்களும் குடும்பத்தினரும் என்னை பாராட்டிய வண்ணம் உள்ளனர். எனக்கு இந்த கேரக்டரை கொடுத்த பிரகாஷ்ராஜுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவருடன் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது.
எனது கணவர் பிரசன்னா எல்லா விஷயங்களிலும் எனக்கு துணையாக இருக்கிறார். உற்சாகப்படுத்துகிறார். என் கணவரால் நான் பெருமைப்படுகிறேன். கடந்த இரு வருடங்கள் எங்கள் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருந்து வருகிறது. எனக்கு அவர் அறிவுரைகள் சொல்வது உண்டு. ஆனால் நிர்ப்பந்தப்படுத்த மாட்டார். நாங்கள் நல்ல ஜோடிகளாக இருக்கிறோம்.
நல்ல கதைகளில் தொடர்ந்து நடிப்பேன், எனது குடும்பத்தினர் திரையில் என்னை பார்க்கும்போது பெருமைப்படவேண்டும். அதுமாதிரி வேடங்களில் தான் நடிப்பேன். கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். வயதான கேரக்டர்களில் நடிக்கவும் எனக்கு ஆட்சேபனை இல்லை. நல்ல கதையும், கேரக்டரும் அமைந்தால் என் கணவர் பிரசன்னாவுடன் இணைந்து நடிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment