பாங்காங் போலீஸில் புகார் அளித்த ரகுல் பிரீத்சிங்!!!

9th of June 2014
சென்னை::கடந்த மாதம் வெளியான ‘என்னமோ ஏதோ’ படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக நடித்திருந்தவர் பாலிவுட் நடிகை ரகுல் பிரீத்சிங். இவர் சமீபத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக தனது தோழிகளுடன் பாங்காங் சென்றிருந்தார்.
 
அங்கே ரிலாக்ஸாக சாலையில் வாக்கிங் சென்றபோது மோட்டர்சைக்கிளில் வந்த இருவர் ரகுல் பிரீத்சிங்கிடம் இருந்த கைப்பையை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துச்சென்றனராம். அந்த சூழ்நிலையில் அவரால் ஒன்றுமே செய்ய இயலவில்லை.
 
தைத்தொடர்ந்து ரகுல் பிரீத் சிங் அங்கிருந்த லோக்கல் போலீஸிடம் புகார் அளித்திருக்கிறார். புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார் தாங்கள் விசாரிப்பதாகவும் இனி வெளியில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள் என்றும் அறிவுறுத்தினார்களாம்..
 

Comments