24th of June 2014
சென்னை:ஹீரோ மேக்கப்படை களைத்த நேரமோ என்னவோ,
சுந்தர்.சி, இயக்குனராக் தொடர்ந்து வெற்றிப் பெற்று வருகிறார். அரண்மனை
என்ற திகில் படத்தை ஆரம்பித்த சுந்தர்.சி அப்படத்தின் படப்பிடிப்பை
படுவேகமாக முடித்துவிட்டார்.
ராய் லட்சுமி, ஆண்ட்ரியா , ஹன்சிகா வினய், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து படம் வெளியாகிறது.
இந்த நிலையில், அரண்மனை படத்தை தயாரித்த விஷன் ஐ குளோபல் மீடியா நிறுவனம் மீண்டும் சுந்தர்.சியுடன் கைகோர்த்துள்ளது. இவர்கள் தயாரிக்கும் அடுத்தப் படத்தையும் சுந்தர்.சி தான் இயக்கப் போகிறார். கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் இப்படத்தில் மூன்று முன்னணி ஹீரோக்கள் ஒன்றாக நடிக்க உள்ளனர்.
தற்பொது இப்படத்திற்கான, நடிகர், நடிகைகள் தேர்வில் ஈடுபட்டுள்ள சுந்தர்.சி, விரைவில் இப்படம் குறித்த முழுமையான தகவலை வெளியிட உள்ளார்.

Comments
Post a Comment