ஹேப்பி பர்த்டே காஜல்!!!

19th of June 2014
சென்னை: 2004ல் காஜல் அகர்வால் அறிமுகமானது பாலிவுட்டில்.. பின்னர் மையம் கொண்டது டோலிவுட்டில். பின் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடித்து வந்தவர் தமிழில் பாரதிராஜா இயக்கிய ‘பொம்மலாட்டம்’ என்ற படத்தில் அறிமுகமானார்.
 
அது நீண்ட நாள் பிரச்சனையில் நிற்க, ராசி இல்லாத நடிகை மாதிரி சிலர் அவரை ஒதுக்க, தமிழ் சினிமாவும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தெலுங்கு, இந்தி என்று நடித்து வந்தவரை ‘பழனி’, ‘மோதி விளையாடு’ என வலுக்கட்டாயமாகத்தான் தமிழுக்கு இழுத்து வந்தார்கள்.
 
எல்லாம் 2009ல் தெலுங்கில் ‘மகதீரா’ வெளியாகும் வரைதான்.. அதன் வரலாறு காணாத வெற்றிக்குப்பின் காஜலின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் சுனாமியாய் சுழன்று அடிக்கத் தொடங்கியது. தொடர்ந்து கார்த்தியுடன் நடித்த ‘நான் மகான் அல்ல’ பூஸ்ட் தர, சூர்யாவுடன் ‘மாற்றான்’, விஜய்யுடன் ‘துப்பாக்கி’ என தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் தவிர்க்க முடியாத நடிகையாகிவிட்டார் காஜல்.
 
‘ஜில்லா’, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வைத் தொடர்ந்து இப்போதும் மொழிக்கு ஒரு படம் என கைவசம் வைத்திருக்கிறார் காஜல். வெற்றிகரமாக திரையுலகில் தனது பத்து ஆண்டுகளை காஜல் நிறைவு செய்துள்ளது ஒரு சாதனை தான். இன்று பிறந்தநாள் காணும் காஜலுக்கு நமது poonththalir-kollywood தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

Comments