மல்டி இண்டர்நேஷனல் மெகா அல்டிமேட் சூப்பர் ஸ்டார்: பிரேம்ஜிக்கு பட்டம் கொடுத்த விஜய்!!!

29th of June 2014
சென்னை:நான் வெற்றியை அடுத்து விஜய் ஆண்டனி தயாரித்து நடித்து விரைவில் வெளிவர இருக்கும் சலீம். இந்த திரைப்படத்தில் அவருடன் பிரேம்ஜி அமரன் காமெடி வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் நடித்தபோது விஜய் ஆண்டனி பிரேம்ஜிக்கு ஒரு புதிய பட்டத்தை கொடுத்துள்ளார். அந்த பட்டத்தின் பெயர் மல்டி இண்டர்நேஷனல் மெகா அல்டிமேட் சூப்பர் ஸ்டார் என்பதுதான்.
 
இந்த படத்தில் பிரேம்ஜி நடித்ததை மிகவும் ரகசியமாக வைத்திருந்ததாகவும் தற்போதுதான் அந்த ரகசியத்தை வெளியிட்டதாகவும் கூறிய விஜய் ஆண்டனி, ‘உலகில் இதுபோன்ற ஒரு பட்டம் எந்த நடிகரும் பெற்றிருக்க மாட்டார் என்றும் இந்த பட்டத்திற்கு மிகவும் பொருத்தமானவர் பிரேம்ஜி மட்டுமே என்றும் கூறியுள்ளார்.
 
விஜய் ஆண்டனி, அக்ஷரா பர்தாசனி, நடித்திருக்கும் இந்த படத்தை நிர்மல்குமார் இயக்கியுள்ளார்.  வருகிற ஜூலை 25ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments