20th of June 2014
சென்னை:நடிகர் சித்தார்த் திருப்பதி கோயிலுக்குச் சென்று மொட்டை போட்டுள்ளார்.
தீயா வேலை செய்யணும் குமாரு வெற்றிக்குப் பிறகு சித்தார்த் ஜிகர்தண்டா, காவிய தலைவன், லூசியா என அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். இதில் ஜிகர்தண்டா, காவிய தலைவன் ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.
விரைவிலேயே இப்படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன. இந்நிலையில் நடிகர் சித்தார்த் கடந்த இரு தினங்களுக்கு முன்பு திருப்பதி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். மேலும் தனது நடிப்பில் வெளியாகயிருக்கும் 'ஜிகர்தண்டா' படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தலைமுடியையும் அப்போது காணிக்கை செலுத்தி இருக்கிறார்.
அவருடன் ஜிகர்தண்டா படக்குழுவினரும் திருப்பதிக்குச் சென்றனர். இதேநாளில்தான் நித்தியானந்தா சாமியாரும், நடிகை ரஞ்சிதாவுடன் திருப்பதிக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருடன் ஜிகர்தண்டா படக்குழுவினரும் திருப்பதிக்குச் சென்றனர். இதேநாளில்தான் நித்தியானந்தா சாமியாரும், நடிகை ரஞ்சிதாவுடன் திருப்பதிக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment