27th of June 2014
சென்னை:ர்கா மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில், S.S.ராஜமௌலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா நடிப்பில், பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகிக்கொண்டிருக்கும் ‘மகாபலி” படத்தின் புதிய வரவாக பிரபல நடிகை தமன்னா இணைந்துள்ளார். சில நாட்களுக்கு முன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவரை ‘மகாபலி’ படக்குழு அன்போடு வரவேற்றது.

ராமோஜி ராவ் பிலிம் சிட்டி மற்றும் அண்ணபூர்ணா ஸ்டுடியோஸ் ஆகிய இடங்களில் இப்படத்திற்கென சிறப்பான பிரம்மாண்ட அரங்ககளை, தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் சாபுசிரில் அமைத்துள்ளார். சிறிது இடைவெளிக்குப் பிறகு படப்பிடிப்பை தொடங்கும் படக்குழு, இவ்வருட இறுதி வரை படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும். படங்களில் இடம் பெறும் போர் காட்சிகள், சர்வதேச தரத்தில் உருவாகும் படங்களுக்கு கிராஃபிக்ஸ் அமைக்கும் தொழில்நுட்ப கலைஞர்களால் வடிவமைக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இசையை M.M. கீரவாணியும், ஒளிப்பதிவை செந்திலும் மேற்கொண்டுள்ளனர்.
இப்படத்தை 2015 ஆம் வருடம் கோடைக்காலத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
Comments
Post a Comment