17th of June 2014
சென்னை:சில திரையரங்கங்களே திருட்டி வி.சி.டி-க்கு துணை போகின்றன என்று, ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான என்.கே.விஸ்வநாதன் கூறியுள்ளார்.
எம்.ஜி.கே மூவி மேக்கர் என்ற நிறுவனம் சார்பில் எஸ்.ரவிசங்கர் தயாரிக்கும் படம் 'களவு தொழிற்சாலை' புதுமுக இயக்குநர் டி.கிருஷ்ணசாமி இயக்கும் இப்படம் சர்வதேச சிலை கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ஜெய் ருத்ரா நாயகினாக நடிக்க, அவருக்கு இணையான வேடத்தில் வம்சி நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடம் ஒன்றில் இயக்குநர் மு.களஞ்சியம் நடிக்கிறார். இப்படத்தில் நாயகியாக குஷி என்ற மும்பை புதுவரவு நடிக்கிறார்.
வி.தியாகராஜன் இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். இவர் ரத்னவேலுவிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். ஹரிஷ் ஜெயராஜிடம் உதவியாளராக பணியாற்றிய ஷாம் பெஞ்சமின் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அண்ணாமலை, நந்ததாலா, டி.கிருஷ்ணசாமி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னை, சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் ஒளிப்பதிவாளர்கள் பி.சி.ஸ்ரீராம், ரத்னவேலு, ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான என்.கே.விஸ்வநாதன், இயக்குநர்கள் வி.இசட்.துரை, சிம்புதேவன், அட்லி உள்ளிட்ட பல திரையுலகினர் கலந்துகொண்டார்கள்.
படத்தின் டிரைலர் மற்றும் பாடல் காட்சிகள் நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது. வந்திருந்த பிரபலங்கள் ஒளிப்பதிவு மற்றும் பாடல்களை பாராட்டி பேசியதோடு, டிரைலர் படத்தைப் பார்க்க தூண்டும் விதத்தில் இருக்கிறது, என்று தெரிவித்தார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய என்.கே.விஸ்வநாதன், "சினிமா என்பது கனவு தொழிற்சாலை, இந்த கனவு தொழிற்சாலையை களவு தொழிலாக திருட்டு விசிடி கும்பலினர் மாற்றி வருகிறார்கள். இதனால், எதிர்காலத்தில் சினிமா தொழிலே ஒரு கனவாகிவிடும் சூழல் நிலவுகிறது. மற்றவர்களை விட சில திரையரங்குகளே இந்த திருட்டு செயலுக்கு துணை போவது வேதனை அளிக்கிறது. இதனை தடுத்து சினிமாவை காக்க வேண்டும்." என்று தெரிவித்தார்.
http://poonththalir-kollywood.blogspot.com/2014/06/kalavu-thozhirchalai-movie-audio-launch.html

Comments
Post a Comment