25th of June 2014
சென்னை:தென்னிந்திய நடிகைகள் ரசிகர்களை அதிகம் கவர்ந்த நடிகைகள் யார்- யார் ?
என்பதை அறிய ஐதராபாத்திலுள்ள ஒரு நிறுவனம் ரசிகர்களிடையே கருத்துக்கணிப்பு
நடத்தியது. இதில் பெருவாரியான ரசிகர்கள் ஸ்ருதிஹாசனுக்கு வாக்களித்து
அவருக்கு முதலிடத்தை பெற்றுக்கொடுத்திருக்கிறார்களாம். குறிப்பாக,
தெலுங்கில் அவர் நடித்த கப்பார்சிங், பலுபு, எவடு, ரேஸ்குர்ரம போன்ற
படங்களில் அவரது நடிப்பும், அழகும் எங்களை கவர்ந்ததாக
குறிப்பிட்டுள்ளார்களாம்.
அவரையடுத்து, தமன்னா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளாராம். மேலும், நயன்தாரா, ஸ்ரேயா, காஜல் அகர்வால், ஹன்சிகா போன்ற நடிகைகள் முதல் 10 நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்களாம்,. ஆனால் கடந்த வருடம் வரை முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டு வந்த சமந்தாவோ, இந்த வாக்கெடுப்பில் 12வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளாராம்.
இதனால், பெரும் அதிர்ச்சியடைந்திருக்கிறார் சமந்தா. இருப்பினும், தற்போது தமிழில் நடித்து வரும் படங்கள் மூலம் மீண்டும் விட்ட இடத்தை பிடித்து விட வேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளாராம்.
Comments
Post a Comment