மும்மொழிகளில் ரீமேக் ஆகும் ‘மஞ்சப்பை’..! இந்தியில் ராஜ்கிரண் வேடத்தில் அமிதாப்!!!

30th of June 2014
சென்னை:கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான ‘மஞ்சப்பை’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. ராஜ்கிரணையும் விமலையும் வைத்து தாத்தா, பேரன் என புது கதைக்களத்தில் படத்தை இயக்கியிருந்தார் அறிமுக இயக்குணர ராகவன். இந்தப்படத்தை திருப்பதி பிரதர்ஸும் சற்குணம் சினிமாஸும். இணைந்து தயாரித்திருந்தன.
 
இப்போது இன்னும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாக இந்தப்படத்தை மூன்று மொழிகளில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கியிருக்கிறார்கள். தெலுங்கில் பிரபல இயக்குனர் தாசரி நாராயணராவ் இதன் தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கியிருப்பதோடு, ராஜ்கிரண் நடித்த தாத்தா வேடத்தில் அவரே நடிக்கவும் இருக்கிறார். ஹீரோவாக நானி அல்லது விஷ்ணு மஞ்சு நடிக்கலாம் என தெரிகிறது.
 
அதேபோல கன்னடத்திலும் இந்தியிலும் ரீமேக் செய்யும் உரிமையை ராக்லைன் வெங்கடேஷ் வாங்கியிருக்கிறார். இவர்தான் தற்போது சூப்பர் ஸ்டார் நடித்துவரும் ‘லிங்கா’ படத்தை தயாரிப்பவர். கன்னட ரீமேக்கிர்கான  வேலைகளை முன்னரே ஆரம்பித்துவிட்டார் ராக்லைன் வெங்கடேஷ். இந்தி ரீமேக்கில் தாத்தாவாக அமிதாப் பச்சன் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

Comments