5th of June 2014
சென்னை:தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துக் கொண்டிருந்த பூனம் பஜ்வா சேவல் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை படங்களில் நடித்தவர். அந்த படங்கள் எதுவும் சரியாக போகாததாலும், சரியான வாய்ப்பு கிடைக்காததாலும். சொந்த ஊரான மும்பைக்கே திரும்பி விட்டார் என்றாலும் ஆன் லைனில் தமிழ் சினிமாவோடு தொடர்பில்தான் இருந்தார்.

எதிரி எண் 3 என்ற படத்தில் மீண்டும்
நடிக்க வந்தார். ஆனால் அந்தப் படம் சில பிரச்னைகள் காரணமாக வெளிவரவில்லை.
இப்போது ஜெயம்ரவி, ஹன்சிகா நடிக்கும் ரோமியோ ஜூலியட் படத்தில் நடிக்க
ஒப்பந்தமாகி இருக்கிறார். காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களுக்குள்
வரும் சின்ன சின்ன ஈகோ பிரச்னைகள்தான் கதை. அந்த புதுமண தம்பதிகளுக்கு
இடையே வரும் கேரக்டராக பூனம் பாஜ்வா நடிக்கிறார். கொஞ்சம் வில்லித்தனம்
கலந்த கேரக்டர் என்கிறார்கள்.
இந்தப் படத்திற்கு பிறகு சென்னையிலேயே தங்கியிருந்து தமிழ் சினிமாவில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார்..

Comments
Post a Comment