இமான் இசையில் முதன்முதலாக பாடினார் லட்சுமி மேனன்!!!

9th of June 2014
சென்னை::
ரம்யா நம்பீசன், நஸ்ரியா உள்ளிட்ட சில நடிகைகள் பாடகியாக மாறிவரும் இந்த காலகட்டத்தில் லட்சுமி மேனன் மட்டும் அதற்கு விதிவிலக்காகி விடுவாரா என்ன? இல்லை அவரை மட்டும் தான் சும்மா விட்டுவிடுவார்களா நம் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும்?
 
ஆம். இப்போது லட்சுமி மேன்னும் பாடகி ஆகிவிட்டார். ஆனால் தான் நடிக்கும் படத்தில் பாடவில்லை. ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தில் டி.இமான் இசையில் தான் பாடியுள்ளார். ‘கும்கி’ படத்தில் அவருக்கு சூப்பர்ஹிட் பாடல்களை தந்து பிரபலப்படுத்தியவர் தானே இமான். அந்த நட்புக்காகத்தான் லட்சுமி மேனன் இந்தப்பாடலை பாடியதாக இமானின் நெருங்கிய வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Comments