ரிலீஸ் அன்றே கோச்சடையான் முதல் நாள் வசூலை நெருங்கிய ‘மஞ்சப்பை!!!

8th of June 2014
சென்னை:மஞ்சப்பை’க்கு கிடைத்த வரவேற்பின் மூலம் எதிர்பார்த்த ஒரு வெற்றியைத்தான் ருசித்திருக்கின்றன திருப்பதி பிரதர்ஸும் சற்குணம் சினிமாஸும். காரணம் தாத்தா-பேரன் என புது களத்தில் இயக்குனர் ராகவன் சொன்ன கதையின் மீதும் ராஜ்கிரண் மீதும் அவர்கள் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தனர்.
 
அதனால் தான் படம் ரிலீஸான அன்றே பலத்த வரவேற்புடன் தியேட்டர்களை நிரப்பியது. கிட்டத்தட்ட ‘கோச்சடையான்’ படம் ரிலீஸான அன்று எவ்வளவு வசூலித்த்தோ அதில் 70 சதவீதத்தை தொட்டுவிட்டது ‘மஞ்சப்பை’. வினியோகஸ்தர்களுக்கு இது மகிழ்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது உண்மையிலேயே ஆச்சர்யமான விஷயம் தான்.

Comments