தொட்டால் விடாது படத்திற்காக படம்பிடிக்கப்பட்ட நிஜ பேஷன் ஷோ நிகழ்ச்சி!!!

22nd of June 2014
சென்னை:தயாரிக்கப்பட்டுள்ள திரில்லர் திரைப்படம் 'தொட்டால் விடாது'. இப்படத்தில், அஜித் ரவி பிகாசஸ், சஜிமொன் பறையில், வினு ஆபிரகாம், அனூப், ஜார்ஜ், பிபின் ஜார்ஜ், சனம் ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

க்ரைம், திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தை அஜித் ரவி பிகாசஸ் தயாரித்து இயக்கியுள்ளார்.

படம் பற்றி கூறிய அஜித் ரவி பிகாசஸ், "நட்பு எப்போதும் முடிவதில்லை காதல் எப்போதும் சாவதில்லை" எனும் கருத்தை மையமாக  கொண்டது இத்திரைப்படம்.


ஒரு இளம் வாலிபன் துபாயில் இருக்கும் தன் உயர்தர வாழ்வை துறந்து தன் நான்கு நண்பர்களுடன் இணைந்து தொழில் தொடங்குவதற்காக தன் சொந்த கிராமத்திற்கு வருகிறான். எல்லாம் நல்லபடியாக  நடக்கும்போது ஐந்தாவதாய் நுழையும் ஒரு நபரால் அவர்கள் வாழ்க்கை தலைகீழாய் மாறிப்போகிறது. அவர்கள் இப்பிரச்சனையை    எப்படி     எதிர்கொள்கிறார்கள், என்பதை தட தடக்கும்  திரைக்கதையில் சொல்வதே இத்திரைப்படம்." என்றார்.

இப்படத்திற்கான 12 கேமராக்களை கொண்டு ஒரு நிஜ, பேஷன் ஷோ ஒன்றை இயக்குனர் அஜித் ரவி, படமாக்கியுள்லாராம். பொதுவாக நான்கு மணி நேரத்தையும் கடந்து நடைபெறும் இதுபோன்ற பேஷன் ஷோக்களில், நடுவில் கட் ஏதும் இல்லாமல், முழுவதுமாக படம்பிடிக்கப்பட்ட இந்த காட்சி படத்தில் பேசப்படும் அளவுக்கு வந்துள்ளதாம்.

Comments