ரஜினி மீது தீபிகா திடீர் கோபம்!!!


5th of June 2014
சென்னை:ரஜினி மீது தீபிகா கோபமாக இருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் பரபரப்பாக தகவல் வெளியிட்டுள்ளது.ரஜினி நடித்துள்ள படம் ‘கோச்சடையான். மோஷன் கேப்சர் முறையில் சவுந்தர்யா ரஜினி இயக்கினார். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் தீபிகா படுகோன் பங்கேற்காததற்கு காரணம் அவரது கதாபாத்திரம் படத்தில் சரியாக காட்டப்படாததுதான் என்று பாலிவுட் தகவல்கள் கூறுகின்றன.
 
இதுபற்றி பாலிவுட் மீடியாவில் வெளிவந்துள்ள பரபரப்பு தகவல்:கோச்சடையான் படத் தில் தனது கதாபாத்திரம் சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை என்று தீபிகா எண்ணியதால்தான் அப்படத்தின் புரமோஷன்களுக்கும் வராமல் தவிர்த்துவிட்டார். இதுதொடர்பாக ரஜினி மீதும் சவுந்தர்யா மீதும் அவர் கோபமாக இருக்கிறார். மேலும் சல்மான் கான் நடிக்கும் ‘பிரேம் ரத்தன் தான் பயோ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க அழைத்தபோது அதை ஏற்க மறுத்துவிட்டதுடன் அவர் ஹீரோவாக நடித்த ‘கிக் படத்தில் குத்து பாடலுக்கு ஆட அழைத்தபோதும் மறுத்துவிட்டாராம். இதெல்லாமே சல்மான் மீது அவருக்கு இருக்கும் கோபத்தின் வெளிப்பாடுதான்.
 
இவ்வளவுக்கு பிறகும் காதலன் ரன்வீர் படங்களில் நடிப்பதில் மட்டும் தீபிகா கவனமாக இருக்கிறார். ‘பஜிராவ் மஸ்தானி‘ என்ற படத்தில் ரன்வீர் ஜோடியாக நடிக்க மட்டும் அவர் கால்ஷீட் தந்திருக்கிறார். மற்ற ஹீரோயின்கள் டாப் ஹீரோக்களுடன் ஒத்துழைக்கும்போக்கை கடைப்பிடிக்கும் தருணத்தில் தீபிகா மட்டும் இப்படி மோதல் போக்கை கடைப்பிடிப்பதால் அவரது திரையுலக வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்கிறார் என்பதையே காட்டுவதாக கூறப்படுகிறது

Comments