படித்துறை படத்தைப் போலவே அமரகாவியம்?: அதிர்ஷ்டக்கட்டையாய் மாறிய ஆர்யா தம்பி!!!

19th of June 2014
சென்னை:ஆர்யாவின் கேரியர்கிராப் ஏறுமுகத்தில் இருக்கிறது. தன் அண்ணனைப்போல் தனக்கும் திரையுலகில் பிரகாசமான இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நடிக்க வந்தார் ஆர்யாவின் தம்பி சத்யா. சத்யாவின் முதல் படம் படித்துறை. பாலாவின் உதவியாளர் சுகா இயக்கிய இந்தப் படத்தை ஆர்யாவே தயாரித்தார். படம் முடிவடைந்தும் அதை கிடப்பில் போட்டுவிட்டார் ஆர்யா.
 
இன்கம்டாக்ஸுக்கு நஷ்டக்கணக்குக் காட்டுவதற்காக படித்துறை படத்தை ஆர்யா பயன்படுத்திக்கொண்டதாக திரையுலகில் சொல்லப்பட்டது. மொத்தத்தில் சத்யா நடித்த முதல் படம் வெளிவரவே இல்லை.
 
அடுத்து டிவி நடிகர் விஜய் ஆதிராஜ் இயக்கிய புத்தகம் என்ற படத்தில் நடித்தார் சத்யா. அந்தப் படம் இரண்டு நாட்கள் கூட ஓடவில்லை. இந்நிலையில் தற்போது அமரகாவியம் என்ற படத்தில் நடித்துள்ளார் சத்யா. ஆர்யா தயாரிப்பில் உருவான இந்தப் படத்தின் பர்ஸ்ட் காப்பி ரெடியாகி பல மாதங்களாகின்றன. இன்னும் படம் பிசினஸ் ஆகவில்லை. அமரகாவியம் படத்தை யாரும் வாங்கவில்லை என்றதும்
 
 தானே ரிலீஸ் செய்ய முடிவு செய்தார் ஆர்யா. தியேட்டர்காரர்களிடம் பாசிட்டிவ்வான பதில் இல்லை. அனேகமாக படித்துறை படத்தைப் போலவே அமரகாவியம் படத்தையும் நஷ்டக்கணக்கு பயன்படுத்திக்கொண்டாலும் ஆச்சர்யமில்லை.

Comments