கேயாருக்கு ஐஸ் வைத்த பவர்ஸ்டார்!!!

27th of June 2014
சென்னை:சந்தானத்துடன் பவர்ஸ்டாரும் கூட்டணி சேர்ந்தால் அதகளம் தான் என்பதை ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திலேயே பார்த்திருப்பீர்கள். இப்போது ‘வாலிபராஜா’ படத்திலும் சந்தானத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளார் பவர்ஸ்டார். கேட்கவா வேண்டும்.

நேற்று நடைபெற்ற இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கேயார் பேசும்போது பவர்ஸ்டாரைப் பற்றியும் அவருக்கு இருக்கும் ரசிகர்களைப் பற்றியும் குறிப்பிட்டு பாராட்டி சில வார்த்தைகள் பேசினார். இது போதாதா பவர்ஸ்டாருக்கு. தான் பேசும் முறை வந்தபோது மைக் பிடிக்க எழுந்துவர, பவர்ஸ்டாருக்கு எழுந்த கைதட்டலுடனான ரசிகர்களின் வரவேற்பை கமலே சற்று ஆச்சர்யமாகத்தான் பார்த்தார்.


மைக்கை பிடித்த பவர், “இந்த மேடையில் தலைவர் கேயாருக்கு நான் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் என்னை ஒவ்வொரு மேடைதோறும் பாராட்டி எனக்கு தொடர்ந்து உற்சாகம் அளித்து வருகிறார்” என ஒரு போடு போட்டாரே பார்க்கலாம்.. கேயாரே அடக்க மாட்டாமல் சிரித்துவிட்டார். 

Comments