தீபாவளிக்கு வெளியாகிறதா 'லிங்கா'?- சூடுபிடிக்கும் வியாபாரம்!!!

4th of June 2014
சென்னை:கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 'லிங்கா' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
கோச்சடையான்' படம் வெளியாகும் முன்பே ரஜினி நடிப்பில் ஆரம்பிக்கப்பட்ட படம் 'லிங்கா'. பொன்.குமரன் கதை, திரைக்கதை எழுத, கே.எஸ்.ரவிகுமார் இயக்கி வருகிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ராக்லைன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது.
 
ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்கா மற்றும் இங்கிலாந்து நடிகை லாரென் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
 
இப்படத்தின் படப்பிடிப்பு மைசூரில் தொடங்கியது. ரஜினி மற்றும் சோனாக்‌ஷி சின்கா சம்பந்தப்பட்ட காட்சிகளும் மற்றும் ரஜினி - இங்கிலாந்து நடிகை லாரென் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டன.
 
தற்போது 'லிங்கா' படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. கே.எஸ்.ரவிகுமார் படங்கள் என்றாலே சரியா திட்டமிடலும், வேகமாக படப்பிடிப்பும் நடைபெறும். 'லிங்கா' படத்தினைப் பொறுத்தவரை தற்போது 40% காட்சிகளை படமாக்கி முடித்து இருக்கிறார்கள்.
 
இந்நிலையில், 'எந்திரன்' சாதனையை 'லிங்கா' முறியடிக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது. 'எந்திரன்' படத்தின் தெலுங்கு பதிப்பின் உரிமையை 27கோடி விலை போனது. தற்போது 'லிங்கா' படத்தின் தெலுங்கு பதிப்பின் உரிமையை 30 கோடி வரைக் கொடுக்க தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

Comments