தெலுங்கில் ரீ-மேக் ஆகும் மஞ்சப்பை!!!

28th of June 2014
சென்னை:லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடாக திரைக்கு வந்த படம் ‘மஞ்சப்பை’. ரசிகர்களின் அமோக வரவேற்பு பெற்று வெற்றிப் படமாக அமைந்துள்ள இப்படம் நல்ல வசூலை ஈட்டியுள்ளது.

இன்னமும் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் விரைவில் தெலுங்கில் ரீ-மேக் ஆகிறது. தெலுங்கில் தயாராகும் ‘மஞ்சப்பை’யை தெலுங்கில் 100 படங்களுக்கும் மேல் இயக்கி பிரபல இயக்குனராக விளங்கும் தாசரி நாராயண ராவ் இயக்கவிருக்கிறார்.

தமிழில் விமல் நடித்த கேரக்டரில் தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ராஜ்கிரண் நடித்த கேரக்டரில் இயக்குனர் தாசரி நாராயணராவே நடிக்க இருக்கிறாராம்! இவர் ஏற்கெனவே பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.

Comments