10th of June 2014
சென்னை:பல ஆண்டு இடைவெளிக்குப்பிறகு இந்த ஆண்டு பொங்கலின்போது விஜய் நடித்த ஜில்லா, அஜீத் நடித்த வீரம் படங்கள் ஒரேநாளில் வெளியாகின.
சென்னை:பல ஆண்டு இடைவெளிக்குப்பிறகு இந்த ஆண்டு பொங்கலின்போது விஜய் நடித்த ஜில்லா, அஜீத் நடித்த வீரம் படங்கள் ஒரேநாளில் வெளியாகின.
இதனால், அப்படங்கள் வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே அவர்களது ரசிகர்கள் தரப்பில் பபரப்பான சூழ்நிலை நிலவியது. போஸ்டர் ஒட்டுவது, கட்அவுட் வைப்பது போன்ற சமாச்சாரங்களில் ஆங்காங்கே மோதிக்கொண்டார்கள்.
இந்த நிலையில், தற்போது மீண்டும் வருகிற தீபாவளி தினத்தில் விஜய்-அஜீத் மோதிக்கொள்வதற்கான சாத்தியங்கள் உருவாகியிருக்கிறது.
விஜய் நடிக்கும் கத்தி படத்தை வேகமாக வளர்த்து வந்த ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது துப்பாக்கி ரீமேக்கான இந்தி ஹாலிடே படம் தொடர்பாக மும்பை சென்றிருப்பதால், கத்தி படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் அவரது 55வது பட வேலைகள் இடையிடையே சில நாட்கள் நிறுத்தப்பட்டாலும், தற்போது சூடுபிடித்து விட்டது.
பொங்கலுக்கு வீரத்தை வெளியிட்ட அஜீத்துக்கு இந்த ஆண்டு இன்னொரு படத்தை கொடுத்து விட வேண்டும் என்று ஆர்வம் அதிகரித்துள்ளதாம்.
அதேபோல், கெளதம்மேனனுக்கும் நீதானே என் பொன்வசந்தம் என்ற தோல்வி படத்துக்குபிறகு இன்னும் அடுத்த படத்தை கொடுக்காததால், அஜீத்தின் ஆர்வத்திற்கேற்ப அவரும் வேகம் காட்டி வருகிறாராம்.
அதனால், ஒருவேளை இன்னும் இரண்டு மாதங்களில் படப்பிடிப்பு பணிகள் முடிந்து விட்டால், விஜய்யின் கத்தி வெளியாகும் தீபாவளிக்கு அஜீத்தின் 55வது படத்தையும் வெளியிட்டு விட வேண்டும் என்று நினைக்கிறாராம்.
அதன்காரணமாக, அப்படத்திற்கு தேவையான செட் வேலைகள் கூட தற்போது தடபுடலாக முடுக்கி விடப்பட்டுள்ளதாம்.
Comments
Post a Comment