தனது சினிமா பயணத்தை இன்னும் உறுதிப்படுத்தும் முயற்சியாக ஆக்சன் கதைகள் பக்கம் திரும்பியிருக்கிறார் ஆர்யா!!!

10th of June 2014
சென்னை::தனது சினிமா பயணத்தை இன்னும் உறுதிப்படுத்தும் முயற்சியாக ஆக்சன் கதைகள் பக்கம் திரும்பியிருக்கிறார் ஆர்யா. இத்தனை நாளும் காதல், காமெடி என்றிருந்த அவர், மீகாமன் படத்தில் அதிரடி ஆக்சன் நாயகனாக உருவெடுத்திருக்கிறார். இதற்காக 7 மெகா வில்லன்கள் உள்பட 12 வில்லன் நடிகர்களுடன் சண்டை காட்சிகளில நடிக்கிறார் ஆர்யா.
கதைப்படி மாலுமியாக நடிக்கும் அவர், சில சண்டை காட்சிகளில் கடல் சார்ந்த பகுதிகளில் நடித்துள்ளாராம். ஒவ்வொரு சண்டை காட்சிகளிலும், உயரமான பகுதிகளில் ரோப்பில் தொங்கியபடி சண்டை போடும் ஆர்யாவுக்கு இரண்டு முறை பலத்த அடியும் பட்டுள்ளதாம். இருப்பினும் அஜீத் பாணியில் எதையும் பொருட்படுத்தாமல் ஒரு மணி நேரம் ஓய்வுவெடுத்து விட்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறாராம்.
 மேலும். இப்படம் தொடங்கியதில் இருந்தே மெகா வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சிகளில நடித்துக்கொண்டிருக்கும் ஆர்யாவை ரிலாக்ஸ் பண்ணும் விதமாக இன்னும் ஓரிரு வாரங்களில் அவரும், ஹன்சிகாவும் கிளுகிளுப்பாக நடனமாடும் டூயட் பாடலை படமாக்குகிறாராம் மகிழ்திருமேனி. அது மட்டுமின்றி, இந்த படத்தில் முக்கிய வில்லனை ஆர்யா வேட்டையாடும் க்ளைமாக்ஸ் காட்சிக்கு முன்னதாக ஒரு அதிரடியான பாடல் உள்ளதாம்.
அந்த பாடல் காட்சியில், யாராவது இங்குள்ள மெகா நடிகையை நடனமாட வைக்கலாம் என்று யோசித்தவர்கள், வடகறி, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படங்களில் பாலிவுட் கவர்ச்சி சுனாமி சன்னி லியோன், குத்தாட்டமாடியிருப்பதைத் தொடர்ந்து, அங்கிருந்து இன்னொரு மெகா நடிகையை தமிழுக்கு இறக்குமதி செய்ய முடிவெடுத்திருக்கிறார்களாம். ஆக, இந்த சேதி ஆர்யாவின் காதுக்கு சென்றதை அடுத்து செம குஷியில் இருக்கிறார் மனிதர். பாலிவுட் நடிகையுடன் நடனமாடும் நாளுக்காக இப்போதே ஆயத்தமாகிவிட்டாராம் ஆர்யா. ஆனால், அவருடன் ஆடப்போகும் நடிகை யார் என்பதே இன்னும் முடிவாகவில்லையாம்.

Comments