ஹேப்பி பர்த்டே ஜி.வி.பிரகாஷ்!!!

13th of June 2014
சென்னை:வெயில்’ படத்தில் தொடங்கி வெற்றிகரமாக தனது இசைப்பயணத்தில் கால் சதத்தை தாண்டிவிட்டார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியின் மகன் என்கிற அடையாளத்தை தனது அறிமுகத்திற்கு மட்டுமே பயன்படுத்திக்கொண்ட ஜி.வி.பிரகாஷ் இந்த அளவுக்கு வளர்ந்தது எல்லாம் தன் திறமையினால மட்டுமே.
 
கமல் தவிர, சூப்பர்ஸ்டார் படம் முதற்கொண்டு கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்துவிட்டார் ஜி.வி.பிரகாஷ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடப் படங்களுக்கும் இசையமைத்த ஜி.விபிரகாஷ் கடந்த வருடம் இந்தியிலும் வெற்றிகரமாக கால்பதித்துவிட்டார். அடுத்து ஹாலிவுட்டிலும் களம் இறங்க இருக்கிறார்.
தயாரிப்பாளராக மாறுவதற்கு தனியாக நெஞ்சுரம் வேண்டும். தனக்கு அதுவும் அதிகமாகவே இருக்கிறது என மதயானை கூட்டம் படத்தின் மூலம் தயாரிப்பாளராகி நிரூபித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். நடிப்பிலும் ஒரு கை பார்த்துவிடுவோமே என தற்போது கௌதம் மேனனிடம் துணை இயக்குனராக வேலைபார்த்த மணி நாகராஜ் இயக்கும் ‘பென்சில்’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
 
இது தவிர இன்னொரு படமான ‘த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா’ என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார். கடந்த வருடம் தனது காதல் மனைவியாக பின்னணி பாடிகி சைந்தவியை கரம்பிடித்த வேளை ஜி.விக்கு தொடர்ந்து ஏறுமுகம் தான்.
 
இன்று பிறந்தநாள் காணும் ஜி.வி.பிரகாஷுக்கு நமது poonththalir-kollywood தனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

நடிகர்கள் சினிமாவில் வளருவதற்கு அவர்களின் திறமை மட்டுமே போதாது. அதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான் அந்த நடிகர்கள் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆவார்கள். அதற்காகத்தான் தாங்கள் நடித்த படங்கள் வெளியாகும்போது, கட்அவுட், போஸ்டர்கள் என்று ஒட்டி பரபரப்பு கூட்டுவதற்காக ரசிகர் மன்றங்களை உருவாக்குகிறார்கள் நடிகர்கள். இதில் சிலர் தங்கள் படம் ரிலீசாகும்போது, கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம், பட்டாசு, தாரை தப்பட்டை என்று அடித்து அமர்க்களப்படுத்தவே பெரும் தொகையை செலவிடுகிறார்கள்.
 
அந்தவகையில், பென்சில் என்ற படத்தில் நடித்து விட்டு அடுத்தபடியாக த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்ற படத்தில் நடிக்கத் தயாராகிக்கொண்டிருக்கும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரும், தற்போது தனக்கு தமிழகமெங்கிலும் ரசிகர் மன்றங்களை உருவாக்கியுள்ளார். சமீபகாலமாக ரசிகர் மன்றங்களை சமூக சேவை அமைப்புகள் போன்று சில நடிகர்கள் நற்பணி மன்றங்கள் என்று குறிப்பிடுவதால் ஜி.வி.பிரகாசும், நற்பணி மன்றம் என்ற பெயரிலேயே துவங்கியுள்ளார்.
 
இதையடுத்து முதல்கட்டமாக அவரது ரசிகர்கள், இன்று ஜூன் 13-ந்தேதி ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு பிறந்த நாள் என்பதால், பல ஊர்களில் அவரை வாழ்த்த போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளனர். குறிப்பாக, பாண்டிச்சேரியில் நேற்றே பல ஏரியாக்களில் அவரது பிறந்த நாள் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. அதில் ஹீரோயிச தோரணையில் செம போஸ் கொடுத்து நின்றார் ஜி.வி.பிரகாஷ். தற்போது அவருக்கு பட்டம் எதுவும் கொடுக்கப்படாததால், இசை நாயகன் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

Comments