5th of June 2014
சென்னை:நடிகை பூஜாவுக்கு ரகசிய திருமணம் நடந்ததாக இரு தினங்களுக்கு முன் செய்திகள் பரவின. இளைஞர் ஒருவருடன் திருமண மாலையுடன் பூஜா நிற்பது போன்று படங்களும் வெளியானது. பூஜாவுடன் இருப்பதுதான் மாப்பிள்ளை என்றும் கூறப்பட்டது. இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது. யாரை திருமணம் செய்தார். தொழில் அதிபரா? நடிகரா? என்று அறிந்து கொள்ள பலரும் ஆர்வப்பட்டனர்.
இந்த நிலையில் தனக்கு திருமணம் நடக்கவில்லை என்று பூஜா மறுப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
எனக்கு திருமணம் நடந்ததாக மீண்டும் வதந்தி பரபரப்ப தொடங்கியுள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரை நான் திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது. அது உண்மையல்ல என்று மறுத்தேன். இப்போது மீண்டும் ரகசிய திருமணம் நடந்து என்கின்றனர். இன்டர்நெட்டில் எனக்கு திருமணம் நடந்து விட்டது போல் படமும் வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த படத்தில் என்னுடன் இருப்பவர் பெயர் ராஜ். கடவுள் பாதி மிருகம் பாதி என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
எனக்கு அவர் நெருங்கிய நண்பர். கல்லூரியில் ஒன்றாக படித்துள்ளோம். தனது படத்தில் கவுரவ தோற்றத்தில் ஒரு காட்சியில் நடிக்கும்படி என்னிடம் கேட்டுக் கொண்டார். நானும் அதை ஏற்றுக் கொண்டு நடித்து கொடுத்தேன். இருவரும் சேர்ந்து நடித்த போது எடுக்கப்பட்ட போட்டோ தான் அது. அப்படத்தை யாரோ இன்டர்நெட்டில் கசிய விட்டு எங்களுக்கு ரகசிய திருமணம் நடந்து விட்டதாக வதந்தி பரப்பியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment