29th of June 2014
சென்னை:தெலுங்குத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவர் தேவி ஸ்ரீ
பிரசாத். தமிழில் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் ஏனோ இங்கு
ஒரு பெரிய பெயரை அவரால் இன்னும் பெற முடியவில்லை. சமீபத்தில் கூட அஜித்
நடித்த 'வீரம்' படத்திற்கு இசையமைத்திருந்தார். ஆனால், அந்தப் படத்தின்
பாடல்கள் பெரிதாக ஹிட்டாகவில்லை. இப்போது 'கத்தி' படத்திற்குப் பிறகு
விஜய், சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கப் போகும் படத்திற்கு தேவி ஸ்ரீ
பிரசாத் இசையமைக்க உள்ளார்.
விஜய் நடித்த 'சச்சின்' படத்திற்கு ஏற்கெனவே தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். அந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டானவை என்பது குறிப்பிடத்தக்கது. 'சச்சின்' வெளிவந்து சுமார் 9 வருடங்கள் ஆகி விட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது மீண்டும்
விஜய் படத்திற்கு இசையமைக்கிறார். இது குறித்து தேவி ஸ்ரீ பிரசாத் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார். இந்தப் படம் தனக்கு தமிழில் சிறந்த திருப்புமுனையாகவும் அமையும் என்று நம்புகிறார். பொதுவாகவே விஜய் படத்தில் பாடல்கள் அதிரடியாக அமையும். அது தேவிக்கு கை வந்த கலை என்பதால் இந்தப் படத்தின் பாடல்களிலும் தனி கவனம் செலுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment