23rd of June 2014
சென்னை:ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்ட தனுஷ், திருமணமான
புதிதில் திரையுலக விழாக்கள் மற்றும் பார்ட்டிகளுக்கு மனைவி ஐஸ்வர்யா
உடன்தான் வந்து கொண்டிருந்தார். தனுஷை வைத்து 3 படத்தை ஐஸ்வர்யா டைரக்ட்
செய்தபோதும் கூட மனைவி உடன் அன்னியோன்யமாகவே இருந்தார் தனுஷ்.
அதன் பிறகு
என்ன நடந்ததோ தெரியவில்லை.. தனுஷையும், ஐஸ்வர்யாவையும் ஒன்றாகப் பார்ப்பதே
அரிதாகிவிட்டது. இருவரும் சேர்ந்து இருக்க வேண்டிய சந்தர்ப்பங்களை
திட்டமிட்டே இருவரும் தவிர்ப்பது அப்பட்டமாகத் தெரிந்தது. இதுபோன்ற
விஷயங்களை எல்லாம் வைத்து தனுஷ் - ஐஸ்வர்யா இடையில் மனக்கசப்பு
உருவாகிவிட்டது என்றும், அது அவர்களது குடும்ப வாழ்க்கையில் பெரும் புயலாக
வீசிக்கொண்டிருக்கிறது என்றும் திரையுலகில் பேசப்பட்டு வந்தது.
அதுமட்டுமல்ல, தனுஷ் - ஐஸ்வர்யா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட காரணமே, ஸ்ருதிஹாசன்தான் என்ற தகவலும் பரபரப்பாக அடிபட்டது. அதாவது 3 படத்தில் இருவரும் சேர்ந்து நடித்தபோது தனுஷுக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் இடையில் ஏற்பட்ட நெருக்கம், தனிப்பட்டமுறையிலும் தொடர்ந்ததால்தான் தனுஷ்- ஐஸ்வர்யா வாழ்க்கையில் புயல் வீசுவதாக சொல்லப்பட்டநிலையில்... மேற்கண்ட தகவல்களை பொய்யாக்குவதுபோல் தற்போது ஒரு சம்பவம் நடந்திருக்கிறது!
பால்கி இயக்கத்தில் இந்திப் படமொன்றில் நடித்து வரும் தனுஷ், தற்போது அப்படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றிருக்கிறார். வெளிநாடு செல்லும்போது தன்னுடன் மனைவி ஐஸ்வர்யா, மற்றும் குழந்தைகளையும் அழைத்துச் சென்றிருக்கிறார். இதன் மூலம் தன்னைப் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் தனுஷ்.
Comments
Post a Comment