- Get link
- X
- Other Apps
16th of June 2014
சென்னை:சென்ற வெள்ளியன்று வெளியான
‘முண்டாசுப்பட்டி’ திரைப்படம் மவுத்டாக்கில் பெரும் வெற்றி பெற்று. பாக்ஸ்
ஆபீஸில் ‘மஞ்சப் பை’யை கீழேயிறக்கி முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.
படம் பார்த்த திரையுலக பிரபலங்களெல்லாம்
“ரொம்ப நாள் கழித்து படம் முழுவதும் சிரிக்க வைத்திருக்கிறார்கள்…” என்று
பாராட்டித் தள்ளியிருக்கிறார்கள்.இந்தப் படம் பற்றிக் கேள்விப்பட்ட சூப்பர்ஸ்டார் ரஜினி உடனேயே கடந்த சனிக்கிழமையன்று அவசரமாகப் படத்தைப் பார்த்தவர் ஆச்சரியப்பட்டுப் போனாராம்.
முண்டாசுபட்டி தன் மனதை கவர்ந்ததாகவும், மனம் விட்டு பல இடங்களில் சிரித்ததாகவும் கூறியிருக்கிறார். படத்தில் நடித்த விஷ்ணு விஷால், நந்திதா மற்றும் படத்தில் நடித்த அனைவரையும் பாராட்டினார். குறிப்பாக ‘முனீஸ்காந்த்’ கதாபாத்திரத்தில் நடித்த ராமதாஸ் மற்றும் காளியின் நடிப்பை வெகுவாக ரசித்ததாக சூப்பர் ஸ்டார் பாராட்டியிருக்கிறார்.
படத்தின் இயக்குனர் ராம்குமார், ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோரையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.
குடும்பத்துடன் ரசிக்கக் கூடிய சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை தந்தமைக்காக படத்தின் தயாரிப்பாளர்கள் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் சி வி குமார் அவர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.
பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் சி.வி.குமாரின் திருகுமரன் என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான ‘முண்டாசுபட்டி’ திரைபடத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து ரசித்தார். படத்தை பார்த்த பின், ‘முண்டாசுபட்டி’ தன் மனதை கவர்ந்ததாகவும், மனம் விட்டு பல இடங்களில் சிரித்ததாகவும் கூறினார்.
இனி இந்தப் படத்துக்கு பெரிய விளம்பரம் ஏதும் தேவையில்லை..!
இனி இந்தப் படத்துக்கு பெரிய விளம்பரம் ஏதும் தேவையில்லை..!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment