12th of June 2014
சென்னை:தமிழில் வசந்த் இயக்கிய மூன்று பேர் மூன்று காதல் படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தவர் சுர்வின் சாவ்லா.
சென்னை:தமிழில் வசந்த் இயக்கிய மூன்று பேர் மூன்று காதல் படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தவர் சுர்வின் சாவ்லா.
தற்போது அர்ஜுன் இயக்கி, தயாரித்து, நடிக்கும் ஜெய்ஹிந்த் 2 படத்தில் நடித்து வருகிறார். சுர்வின் இந்தியில் ஹேட் ஸ்டோரியின் இரண்டாம் பாகத்தில் நடித்திருப்பதுதான் இப்போது பாலிவுட்டின் ஹாட் நியூஸ்.
ஹேட் ஸ்டோரி படம் 2012ம் ஆண்டு வெளியாகி பரபரப்பை கிளப்பியது. தன்னை பலாத்காரம் செய்தவர்கள் ஒரு பெண் வேட்டையாடுகிற கதை. அதே கதையின் தொடர்ச்சிதான் இதுவும்.
இதில் சுர்வினை ஒரு அரசியல் வாதி, ஒரு அதிகாரி, ஒரு தாதா சேர்ந்து பலாத்தாரம் செய்கிறார்கள். அவர்களை பொறி வைத்து பிடித்து பழிவாங்குகிற கதை. அவர் வைக்கும் பொறி செக்ஸ்.
இதில் இதுவரை எந்த இந்திய நடிகையும் நடித்திராத வகையில் சுர்வின் படுக்கையறை காட்சிகளில் நடித்திருக்கிறார். முத்தக் காட்சிகள் ஆங்கில படங்களையும் விஞ்சுகிற அளவிற்கு இருக்கிறதாம்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் டிரைலரில் சுர்வினின் நடிப்பை பார்த்தவர்கள் வாயடைத்துப்போய் நிற்கிறார்கள்.
Comments
Post a Comment