பொது மக்களை மிரட்டிய பூஜை படக்குழுவினர்: காவல்துறை கண்டிப்பு!!!

2nd of June 2014
சென்னை;விஷால், ஸ்ருதி ஹாசன் ஜோடியாக நடிக்கும் படம் 'பூஜை'. இயக்குநர் ஹரி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆனைமலை ஆழியாற்றங்கரையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இதில் விஷால் காரில் மற்றொரு காரை முந்திச்செல்வது போன்று காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக ஆனைமலை– உடுமலை சாலை முற்றிலும் அடைக்கப்பட்டது. இதனால் ஆம்புலன்ஸ், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல படக்குழுவினர் அனுமதிக்கவில்லை.

இதை அறிந்த அந்த பகுதி கவுன்சிலர் படக்குழுவினரிடம் சென்று உரிய அனுமதி பெற்றுள்ளீர்களா? என்று கேட்தற்கு, கவுன்சிலர் மற்றும் பொது மக்களை படக்குழுவினர் மிரட்டியதாக கூறப்படுகிறது.

பின்னர் இது குறித்து ஆனைமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. விரைந்து வந்த போலீசார் அனுமதியில்லாமல் போக்குவரத்தை நிறுத்தியதற்கும், பொது மக்களை மிரட்டியதற்கும் படக்குழுவினரை கண்டித்தார். மேலும்
படப்பிடிப்பு நடத்த நாளொன்றுக்கு வசூலிக்கப்படும் ரூ.2500 பணத்தையும் அனுமதியில்லாமல் படப்பிடிப்பில் ஈடுபட்டதால் ரூ.2500 அபராதத்தையும் வசூலித்தனர்..
 

Comments