ரெய்னாவை காதலிக்கவில்லை அடித்து சொல்கிறார் ஸ்ருதி!!!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

2nd of June 2014
சென்னை:
கிரிக்கெட் வீரர் ரெய்னாவை காதலிக்கவில்லை. சொன்னா நம்புங்க என்றார் ஸ்ருதிஹாசன்.கமல் மகள் ஸ்ருதிஹாசனும், இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் பார்ட்டி ஒன்றில் சந்தித்தபோது நண்பர்கள் ஆனார்கள். பிறகு இருவருக்கும் காதல் மலர்ந்ததாக மும்பை பத்திரிகைகளில் 2 நாட்களுக்கு முன் பரபரப்பாக தகவல் வெளியானது. இது திரையுலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. ஸ்ருதிஹாசன் தற்போது தமிழ், தெலுங்கு. இந்தி என 3 மொழிப் படங்களில் நடித்து வருகிறார். அப்பட இயக்குனர்-தயாரிப்பாளர்கள் ஸ்ருதிக்கு போன் செய்து காதல் விவகாரம் பற்றி விசாரித்தனர்.இது பற்றி ஸ்ருதிஹாசன் கூறும்போது,
 
உண்மையாகவும், ஒட்டுமொத்தமாகவும் சொல்கிறேன் நான் தனியாகத்தான் இருக்கிறேன். 3 மொழிப் படங்களில் நடித்துக்கொண்டு அங்கும் இங்குமாக பறந்துகொண்டிருக்கிறேன். மூச்சு விடுவதற்குகூட அவகாசம் இல்லை. ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறேன். என்னைப்போல் யாராவது இப்படி சுழன்றுக்கொண்டிருக்கிறார்களா என்பது தெரிந்தால் சந்தோஷப்படுவேன். எனக்கென்று காதலன் யாரும் இல்லை. அதுபோல் ஒருவரை இதுவரை நான் பார்க்கவில்லை அப்படி சந்தித்தால் அதை நிச்சயம் எல்லோருக்கும் தெரிவிப்பேன். என்னை நம்புங்க என்று கூறி இருக்கிறார்.
 
முன்னதாக ரெய்னாவும் ‘ஸ்ருதியுடன் காதல் இல்லை என்று தெரிவித்துள்ளார். நடிகையை ரெய்னா காதலிப்பதாக கிசு கிசு கிளம்புவது இது முதல்முறை கிடையாது. அதே சமயம் பார்ட்டியில் ஸ்ருதியும் ரெய்னாவும் வெகுநாள் பழகியதுபோல் நடந்துகொண்டார்கள். அதனாலேயே இருவருக்கும் காதல் என தகவல் பரவியது என இந்தி சினிமாவினர் கூறினர்..

Comments